ஐதராபாத் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குவாண்டெல்லா இங்க் என்ற நிறுவனத்திற்கு உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2019-ஆம் ஆண்டிற்கான “தொழில்நுட்ப முன்னோடிகள்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நாகாலாந்து மாநிலத்தின் முழுப் பகுதியையும் “பாதிக்கப்பட்ட பகுதியாக”, ஆறு மாத காலத்திற்கு இம்மாநிலத்தை AFSPA (Armed Forces Special Powers Act) சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளது.
இச்சட்டம் முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் எந்தவொரு நபரைக் கைது செய்யவும், சோதனைகளை மேற்கொள்ளவும் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளிக்கின்றது.
அடிப்படைத் தேய்மானம் மற்றும் இலாப செயல் மாற்றத்தைத் (BEPS - Base Erosion and Profit Shifting) தடுப்பதற்கு வேண்டிய வரி ஒப்பந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக பலதரப்பு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்த பலதரப்பு ஒப்பந்தம் என்பது BEPS என்பதனை எதிர்கொள்வதற்காக G20 அல்லது OECD அமைப்பின் தீர்மானத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.