இத்தாலியின் நப்போலியில் நடைபெற்ற 30-வது உலகப் பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர் இளவேனில் வளரிவான் என்பவர் 10 மீ துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இளவேனில் இளையோர் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கத்தை மூன்று முறை பெற்றுள்ளார்.
கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் மற்றும் போரில் பங்கேற்றவர்களுக்கு கௌரவம், மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்துவதற்காக கார்கில் போரின் 20-வது ஆண்டு நினைவின் போது இராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஒரு சிறப்பு அஞ்சலிப் பாடல் வெளியிட்டுள்ளார்.
இது புகழ்பெற்ற இந்திக் கவிஞரான சமீர் அஞ்சன் என்பவரால் இசையமைக்கப்பட்டு சதாத்ரு கபீர் என்பவரால் பாடப்பட்டது.
வங்க தேசத்தின் டாக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மையம் தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF - International Monetary Fund) தற்போதையத் தலைவரான கிறிஸ்டினி லகார்டே என்பவர் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு தலைமை வகிக்கும் முதலாவது பெண்மணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டில் IMF-ன் தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்மணி இவராவார்.
இந்திய ரிசர்வ் வங்கியானது “உன்னுடைய வாடிக்கையாளர்களை அறிந்து கொள்” என்பதற்கான விதிமுறைகள் மற்றும் நடப்புக் கணக்குகளைத் தொடங்குவதற்கான விதிமுறைகள் ஆகியவற்றை சரியாகக் கடைபிடிக்காததற்காக 4 பொதுத் துறை வங்கிகள் மீது 1.75 கோடி அபராதத்தை விதித்துள்ளது.
பஞ்சாப் தேசிய வங்கி, அலகாபாத் வங்கி, யூகோ வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை இந்த 4 வங்கிகளாகும்.