TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 13 , 2019 1835 days 747 0
  • ஹார்மஸ் நீர்ச் சந்தியில் உள்ள அபு முசா தீவுகளுக்கு அருகில் பிரித்தானிய எண்ணெய்க் கப்பலை கைப்பற்ற ஈரான் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது.
    • ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தால் உரிமைக் கோரப்படும் அபு முசா தீவானது தற்போது ஈரானால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படப் பிரிவானது இந்திய ஆவணப் படத் தயாரிப்பாளர் கூட்டமைப்புடன் இணைந்து “KSHITIJ” எனும் ஆவணப்பட மன்றம் ஒன்றை மும்பையில் தொடங்கியது.
    • அஜய் & விஜய் பேடியின் புகழ்பெற்ற ஆவணப் படமான “Secret Life of Frogs” தொடக்க படமாகத் திரையிடப்படும்.
  • அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற 10வது உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சியில் 11வது உலகத் தமிழ் மாநாடு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
  • கலைச் சிறப்பிற்கான டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா தேசிய விருதான “முரளி நடா லஹாரி” என்ற விருதானது பின்னணிப் பாடகரான S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • இந்த விருதானது கர்நாடக சங்கீதப் பாடகரின் பிறந்த நாளில் பாரதிய வித்யா பவன் மற்றும் M. பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை நடத்திய பாலமுரளி நடா மஹோத்சவ் 2019 இன் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது.
  • தென்கொரிய மகிழுந்துத் தயாரிப்பு நிறுவனமான “ஹுண்டாய்” நிறுவனம் முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் “கோனா எலக்டரிக்” எனும் தனது சொகுசுக் காரை இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த வாகனம் ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 425 கி.மீ. ஓட்ட அளவை உறுதியளிக்கும்.
    • ஹவாயின் பிக் தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியின் பெயரால் 'கோனா எலக்ட்ரிக்’ என இதற்குப் பெயரிடப்பட்டது.
  • அமெரிக்க நிபுணத்துவ பேஸ்பால் விளையாட்டுகளில் “அட்லாண்டிக் லீக்” என்றழைக்கப்படும் அணியால் முதன்முறையாக ரோபோக்கள் நடுவர்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்திய நாட்டவரான அன்ஷீலா காந்தை அதன் அடுத்த தலைவர் மற்றும் தலைமை நிதியியல் அலுவலராக (CFO – Chief Financial Officer) நியமிக்கப் பட்டுள்ளதாக உலக வங்கிக் குழுவானது அறிவித்துள்ளது. இவரே உலக வங்கியின் முதல் பெண் CFO ஆக இருப்பார்.
    • இவர் முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் CFO ஆக இருந்தவர் ஆவார்.
  • ஜப்பானின் ஹயபுசா-2 விண்கலமானது தொலைதூர குறுங்கோள் மீது சரியான இறங்குதலை மேற்கொண்டுள்ளது. சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்துப் பல தகவல்களை அளிக்கக் கூடிய இந்த முதலாவது திட்டமானது அதன் பரப்பிலிருந்து அடியிலிருந்து மாதிரிகளைச் சேகரிக்கவுள்ளது.
    • விண்வெளியில் சந்திரனை விட தொலையில் உள்ள ஒரு விண்வெளிப் பொருளின் பரப்பிலிருந்து மாதிரிகளை சேகரிப்பது இதுவே முதன்முறையாகும்.
  • 87 மில்லியன் பயனாளர்களுக்குச் சொந்தமான தகவல்களைப் பிரித்தானிய அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவுடன் இரகசியமாகப் பகிர்ந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அரசானது முகநூலுக்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்