TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 17 , 2019 1963 days 791 0
  • பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.1.5 இலட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.
    • பீகார் அரசு கூடுதலாக கின்னார் கல்யான் வாரியத்தையும் (மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம்) அமைக்கவிருக்கின்றது.
  • பாகிஸ்தான் அரசு இந்திய விமானங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி விமானப் போக்குவரத்திற்காகத் தனது வான்வழிப் பாதையைத் திறந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற பால்காட் விமானப் படைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது வான்வழிப் பாதையைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்குத் தடை விதித்திருந்தது.
  • ஒவ்வொரு ஆண்டும் பிரான்சு நாடு ஜூலை 14 ஆம் தேதியை தேசிய பிரான்சு தினமாக அனுசரிக்கின்றது. மேலும் இது பாஸ்டைல் தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.
    • இத்தினம் பாஸ்டைல் சிறைத் தகர்ப்பின் நினைவை அனுசரிக்கின்றது. மேலும் இத்தினம் 1789 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று பிரெஞ்சுப் புரட்சி தொடங்கியதையும் அனுசரிக்கின்றது.
  • “விஜய் நடவடிக்கை” வெற்றி பெற்றதின் 20வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களைத் தொடங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் உள்ள தேசியப் போர் நினைவிடத்தில் வெற்றிச் சுடரை ஏற்றினார்.
  • 2019 ஆம் ஆண்டு நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை கோவாவின் பனாஜியில் இந்திய சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் (IFFI - International Film Festival of India) பொன் விழாப் பதிப்பு நடைபெறவிருக்கின்றது. 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்நிகழ்ச்சியானது நிரந்தரமாக கோவாவில் நடைபெறுகின்றது.
    • இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்காளர் நாடு இரஷ்யா ஆகும்.
  • ரோமானியாவைச் சேர்ந்த சைமோனா ஹலீப் என்பவர் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் என்வரை இறுதிச் சுற்றில் 6-2, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி 2019 ஆம் ஆண்டின் மகளிர் ஒற்றையர் விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • தற்பொழுது விம்பிள்டனில் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதலாவது ரோமானியராக சைமோனா ஹலீப் விளங்குகின்றார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபனிலும் வெற்றி பெற்றுள்ளார்.
  • இந்தியத் தொலைத் தொடர்புத் துறை மற்றும் சர்வதேசப் பொருளாதார உறவுகள் மீதான ஆராய்ச்சிக்கான இந்திய மன்றம் (Indian Council for Research on International Economic Relations) ஆகியவை தொலைத் தொடர்புத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கு வேண்டி இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான அகலப் பட்டை தயார்நிலைக் குறியீட்டை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • சிங்கப்பூர் குடியரசின் அதிபரான ஹலிமாஹ் யக்கோப் என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான A.K.சிக்ரியை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தின் (SIIC - Singapore International Commercial Court) சர்வதேச நீதிபதியாக நியமித்துள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி இப்பொறுப்பை ஏற்கவிருக்கின்றார்.
    • இவருடைய பதவிக் காலம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 அன்று முடிவடையும். தற்பொழுது SICC ஆனது 16 சர்வதேச நீதிபதிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்