TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 20 , 2019 1828 days 657 0
  • சுதந்திரப் போராட்ட வீரரான S.S ராமசாமி படையாட்சியைக் கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு அவருடைய உருவப் படத்தை மாநில சட்ட சபையில் 19.07.2019 அன்று திறந்து வைத்தது.
  • தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும் பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓரிதழைத் தெரிவு செய்து அதற்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • ராஜஸ்தானின் பொக்ரான் ஏவு தளத்தில் நாக் ஏவுகணையின் கோடைக் காலப் பயன்பாட்டுப் பரிசோதனைகளை இந்திய இராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது இந்திய இராணுவத்திற்குள் ஏவுகணை அமைப்பின் உற்பத்தி மற்றும் இணைப்பு ஆகியவற்றிற்கு வழி வகுக்கின்றது.
  • பிரிட்டிஷ் கொலம்பியாவின் கனடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கணினி மாதிரி மற்றும் தேர்வுமுறை வழிமுறைகளைப் பயன்படுத்தி “அல்கோபேட்” என்ற உயர் செயல்பாடு கொண்ட கிரிக்கெட் மட்டையை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
    • இவர்கள் கிரிக்கெட் பந்து மட்டையைத் தாக்கும் போது ஏற்படும் அதிர்வுகளைக் குறைப்பதற்காக மட்டையின் வடிவமைப்பை மாற்றியுள்ளனர். எனவே இந்த அதிர்வின் மூலம் உருவாகும் ஆற்றல் பந்திற்கு மாற்றப்படுகின்றது.
  • டெக்னியோன் இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் “இந்தியக் கணிதவியலாளரின்” நினைவாக “இராமானுஜன் இயந்திரம்” என்ற பெயர் கொண்ட ஒரு கருத்துருவை மேம்படுத்தியுள்ளளனர்.
  • சர்வதேச நாணய நிதியத்தின்படி (International Monetary Fund - IMF), இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது 2017-18 ஆம் ஆண்டில் 49 பில்லியன் டாலரிலிருந்து 2018-19 ஆம் ஆண்டில் 68 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்