TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 22 , 2019 1958 days 679 0
  • தான்சானியாவில் உள்ள உசாம்பரா மலைப் பகுதியில் புதிய மர இனமான பூக்கும் வகை மரமிஸ்கோஜின் இட்டி மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
    • இது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மன்றத்தின் பட்டியலில் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • கேரள அரசானது திருவனந்தபுரத்தின் அறிவுத் திருநகரத்தில் நாட்டின் முதல் விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கவுள்ளது.
    • மேலும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரிடப்பட்ட விண்வெளி அருங்காட்சியகமும் இந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.
  • சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூரில் குப்பைகளைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக உணவு வழங்கும் முதல் சிற்றுண்டியகம் (கஃபே) தொடங்கப் பட்டுள்ளது. இது நெகிழிக் கழிவுகளுக்குப் பதிலாக முழுச் சாப்பாட்டை அளிக்கும்.
    • மேலும் அம்பிகாபூரில் கழிவுகள் சேகரிப்போர்களுக்கும் கந்தல்களைச் சேகரிப்போர்களுக்கும் இந்த சிற்றுண்டியகம் வீடுகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • பட்டாயாவில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் சதுரங்கப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க கிராண்ட் மாஸ்டரான P. இனியன் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.
  • மகிழ்ச்சிக்கான பாடத் திட்ட அறிமுகத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக டெல்லியின் கல்வி இயக்குநரகமானது அதன் அனைத்துப் பள்ளிகளிலும் 15 நாள் “மகிழ்ச்சி உத்சவ்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்