TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 23 , 2019 1825 days 668 0
  • உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation - WHO) முதல்நிலைத் தரவானது காங்கோவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றின் போது பயன்படுத்தப்பட்ட மெர்க்கிஸ் தடுப்பு மருந்தானது (VSV-EBOV), எபோலா நோய்த் தொற்றைத் தடுப்பதில் 97.5% செயல்திறன் மிக்கதாக இருந்தது என்று கூறுகின்றது.
    • இந்தத் தடுப்பூசியானது எபோலா வைரஸின் புரத உறையின் ஒரு பகுதியுடன் இணைந்த “வெசிகுலர் ஸ்டோமாடிடிஸ் வைரஸ்” எனப்படும் விலங்குகளில் காணப்படும் வைரஸை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • இந்திய பாடிபில்டரான (உடற்கட்டுநர்) ரவீந்தர் குமார் மாலிக் மிஸ்டர் தெற்கு ஆசிய ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • இவர் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற 12-வது தெற்கு ஆசிய உடற்கட்டுநர் (பாடிபில்டிங்) மற்றும் தேகக் கட்டமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்த சாம்பியனாக முடிசூட்டப் பட்டார்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் தேதி பை (Pi) தோராய தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
    • “Pi” என்பதின் பொதுத் தோராய பின்னம் 22/7 என்று கூறப்படுகின்றது.
  • வீர்மாதா ஜிஜாபாய் போஸ்லே உதயன் மற்றும் விலங்கியல் பூங்காவை புதுப்பிப்பதற்கான தனது முயற்சியின் ஒரு பகுதியாக, பிருஹன்மும்பை மாநகராட்சியானது சர்வதேச விலங்கியல் பூங்காவிலிருந்து 2 ஜோடி வரிக் குதிரைகளையும் சில அயல்நாட்டுப் பறவையினங்களையும் குஜராத்திற்குக் கொடுத்து, அதற்குப் பதிலாக 2 ஜோடி சிங்கங்களைப் பெறத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்