சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து அகர்பத்தி மற்றும் பிற அதனை ஒத்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்று வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
2019-21 ஆம் ஆண்டு கால கட்டத்திற்கான உலகத் தேர்தல் அமைப்புகளின் சங்கத்தின் (Association of World Election Bodies : A-WEB) தலைவராக இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பொறுப்பேற்றார். ருமேனியாவிடமிருந்து A-WEB சங்கத்தின் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கின்றது. இந்தியா இரண்டு வருட காலத்திற்கு இந்தச் சங்கத்தின் தலைவராக பணியாற்ற இருக்கின்றது.
தேசியத் தலைநகரான புது தில்லியில் உள்ள குஜராத் அரசின் இரண்டாவது மாநில பவனான ‘கார்வி குஜராத்’ என்ற பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
தேசியத் தலைநகரில் உள்ள ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த’ முதலாவது மாநில பவன் இதுவே ஆகும்.
அசாமில் உள்ள இரண்டு கோயில்களின் குளங்களில் வளர்க்கப்படும் அரிய கருப்பு மென் ஓடு கொண்ட மற்றும் இந்திய மென் ஓடு கொண்ட சுமார் 70 ஆமைக் குஞ்சுகள் அசாமின் போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன.
இதே போன்ற நிலப்பரப்பு மற்றும் இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் கணிசமான எண்ணிக்கைக் காரணமாக போபிடோரா வனவிலங்கு சரணாலயம் பெரும்பாலும் ‘சிறிய காசிரங்கா’ என்று அழைக்கப்படுகின்றது.
அசோக் லேலண்ட் நிறுவனம் தனது அனைத்து கனரக வாகனங்களிலும் பிஎஸ் - ஆறாம் உமிழ்வு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த முதல் இந்திய அசல் உபகரண உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
இது இந்திய தானியங்கி ஆராய்ச்சிச் சங்கத்திடமிருந்து (ARAI - Automotive Research Association of India) இணக்க சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
ஜப்பானிய எரிசக்தி நிறுவனமான புதிய சகாப்தத்திற்கான ஜப்பானின் எரிசக்தி நிறுவனத்துடன் (JERA - Japan’s Energy For a New Era) ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் கூட்டாக 750 மெகாவாட் எரிவாயு அடிப்படையிலான ஒருங்கிணைந்த சுழற்சி மின் திட்டத்தை வங்காள தேசத்தின் மேக்னாகாட்டில் அமைக்க விருக்கின்றன.
ரிஷப் பந்த் என்பவர் 11 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த இந்திய விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். இந்தியாவிற்காக எம்.எஸ்.தோனி வைத்திருந்த முந்தைய சாதனையை (16) அவர் முறியடித்தார்.
அவரது 50வது விக்கெட் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரெய்க் பிராத்வைட் ஆகும்.