TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 11 , 2019 1776 days 617 0
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ‘பால்கோவாவிற்கு’ புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடிக்கான முதன்மைச் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா தனது ராஜினாமாக் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சரவைச் செயலாளரான பிரதீப் குமார் சின்ஹா பிரதமர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா அம்மாநிலத்தில் “புதன்கிழமைகளில் வேலைக்கு நடந்து செல்லுதல் (WWW - Walk to Work on Wednesdays)" என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
    • இந்தப் பிரச்சாரமானது இந்தியாவில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட நாடு தழுவிய ஆரோக்கியமான இந்தியா என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
  • தில்லியைச் சேர்ந்த யஷஸ்வினி சிங் தேஸ்வால் சமீபத்தில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பையில் பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் (துப்பாக்கி சுடுதல்) போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்வதற்கான தகுதியை அவர் பெற்றுள்ளார்.
    • தற்பொழுது வரை, 2020 டோக்கியோ விளையாட்டுப் போட்டிக்காக துப்பாக்கி சுடுதலில் தேர்வான  9வது வீரர் இவராவார்.
  • 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும் அர்ஜுனா விருது பெற்றவருமான குண்டெறிதல் வீரர் தேஜீந்தர்பால் சிங் தூர் என்பவர் செக் குடியரசின் டெசினில் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் 20.09 மீ  தூரம் குண்டெறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்