TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 15 , 2019 1772 days 592 0
  • நடப்புக் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வைக் கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளில் மட்டும், தோல்வியுற்ற மாணவர்கள் "அதே வகுப்பில் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள்".
  • மத்திய சுகாதார நலத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் புது தில்லியில் உலக சுகாதார அமைப்பு - தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய அலுவலகத்தின் (Regional Office for South-East Asia - SEARO) 72வது அமர்வைத் தொடங்கி வைத்தார். அவர் இந்த அமர்வின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • பிராந்தியக் குழுக் கூட்டத்தை இந்தியா நடத்துவது இது 2வது முறையாகும்.
  • போலந்திலிருந்து ஒரு உயர் மட்டத் தூதுக் குழுவானது மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூருக்குப் பயணம் மேற்கொண்டது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1943-1947 காலப் பகுதியில் கோல்ஹாப்பூருக்கு அருகில் உள்ள வாலிவேட் முகாமிற்கு 5,000 போலந்து அகதிகள் தஞ்சமடைந்தனர்.
    • வாலிவேடில் விரைவில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. குஜராத்தின் ஜாம்நகர் என்ற நகரமானது  5,000 போலந்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது.
  • முழுவதுமாக மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளால் ஆன உயர் தரம் கொண்ட ஹம்சபர் ரயில்களில் இருந்து நெகிழ்வு கட்டணத் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் நீக்கியுள்ளது.
    • ஹம்சபர் விரைவு ரயில்கள் முதன்முதலில் கோரக்பூர் மற்றும் ஆனந்த் விஹார் (புது தில்லி) ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 2016 ஆம் ஆண்டில்  தொடங்கப் பட்டது.
  • IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் மீண்டும் வென்றதன் மூலம் பங்கஜ் அத்வானி தனது உலகப் பட்டங்களை 22 ஆக உயர்த்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்