இந்தியா, சீனாவால் முன்மொழியப்பட்ட பன்னாட்டு நிதி நிறுவனமான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து (Asian Infrastructure Investment - AIIB) 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கடனையும் குழாய்கள் அமைப்பதற்காக மேலும் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கடனாகப் பெற்றதன் மூலம் அந்த வங்கியிலிருந்து அதிகக் கடன் பெறுபவராக உருவெடுத்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்ததாக 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனைப் பெற்று இந்தோனேஷியா அதிகக் கடன் பெறுபவர் வரிசையில் இரண்டாவதாக வெளிப்பட்டுள்ளது.
அந்த வங்கியில்06 சதவீத வாக்கு பங்கினைக் (வாக்களிக்கும் உரிமையைக்) கொண்டு சீனா மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. இந்தியாவானது 7.5 சதவீதத்தைக் கொண்டு இரண்டாவது மிகப் பெரிய பங்குதாரராகவும் அதனைத் தொடர்ந்து 5.93 சதவீதத்தைக் கொண்டு ரஷ்யாவும், 4.5 சதவீதத்தைக் கொண்டு ஜெர்மனியும் பங்குதாரராக உள்ளன.