TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 20 , 2019 1737 days 722 0
  • சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது பட்டமளிப்பு விழாவில்  தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் (ஹானோரிஸ் கௌசா) வழங்கப் பட்டுள்ளது.
    • 2017 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற பழனிசாமி பெற்ற முதலாவது கௌரவ டாக்டர் பட்டம் இதுவாகும்.
  • பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  பாரதியார் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் பி.காளிராஜை நியமித்துள்ளார்.
  • கோபிந்த்வால் சாஹிப்பை இணைக்கின்ற வகையில் கபுர்தலாவில் தொடங்கி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன் தரன் அருகே முடிவடையும் தேசிய நெடுஞ்சாலையானது   “தேசிய நெடுஞ்சாலை - 703AA” என்று ஒரு புதிய நெடுஞ்சாலையாக  அறிவிக்கப் பட்டுள்ளது. இது “ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி மார்க்" என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • 1936 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிறந்த நட்சத்திர இசை அமைப்பாளரான ஜூபின் மேத்தா என்பவர் இஸ்ரேல் இசைக் குழுவின் இசை இயக்குநராக தனது இறுதி இசை நிகழ்ச்சிக்காக டெல் அவிவில் மேடை ஏறினார்.
    • அவர் அந்த இசைக் குழுவுடன் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றார். மேலும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
  • சமீபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த 74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்பவர் இரட்டை குழந்தைகளுக்குத் தாயாகினார். அவர் இப்போது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உலகின் மிக வயதான பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.
  • ஏ.ஜே.கே (AJK) வெகுஜன தொடர்பு ஆராய்ச்சி மையம், ஜாமியா மிலியா இஸ்லாமியா ஆகியவை யுனிசெஃப் உடன் கூட்டு சேர்ந்து நுரையீரல் நோய் (நிமோனியா), வயிற்றுப் போக்கு, இரத்த சோகை, தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பட்டறை ஒன்றை நடத்தின.
  • பெண் குழந்தைகளிடையே ஸ்டெம் (STEM - அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வியை மேம்படுத்துவதற்காக ‘விக்யான் ஜோதி’ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • பிரதமரின் சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் (Prime Minister’s Special Scholarship Scheme - PMSSS) கீழ் இளங்கலைப் பட்டங்களுக்கான  பயிற்சி வகுப்புகளுக்காக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 4500 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில்  விண்ணப்பித்துள்ளனர்.
    • இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த திட்டம் 2011 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • தனது 2020 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் மற்றும் அமேசான் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் மீது புதிய வரி ஒன்றை விதிக்க இத்தாலி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • அடுத்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப்படவுள்ள இந்த வரியானது, இணையப்  பரிவர்த்தனைகள் மீது 3% வரி செலுத்த அந்த நிறுவனங்களைக் கட்டாயப் படுத்த இருக்கின்றது.
  • தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையானது  (Department for promotion of industry and internal trade - DPIIT) சமீபத்தில் அறிவுசார் சொத்துரிமை (intellectual property rights - IPR) பற்றிய ஒரு வலைத் தளத்தையும், ‘உங்கள் கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்கவும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற ஒரு கைபேசிச் செயலியையும் அறிமுகப் படுத்தியுள்ளது.
    • இந்த இரண்டும் குவால்காம் நிறுவனம் மற்றும் தில்லியின் தேசிய சட்ட பல்கலைக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து IPR ஊக்குவிப்பு மற்றும் மேலாண்மைக்கான DPIITயின் பிரிவினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • ரிலையன்ஸ் பரஸ்பர நிதியானது நிப்பான் இந்தியா பரஸ்பர நிதி என மறுபெயரிடப் பட்டுள்ளது. இது இந்தியாவின் ஒரு மிகப்பெரிய வெளிநாட்டுக்குச்  சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனம் ஆகும்.
  • நாக்பூரைச் சேர்ந்த பதின்மூன்று வயதான ரவுனக் சாத்வானி இந்தியாவின் 65வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆக சாதனைப் படைக்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்