TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 23 , 2019 1734 days 737 0
  • சுயவிவரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ள குற்றவாளிகளை அடையாளம் காண தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி பி. அரவிந்தன் மற்றும் அவரது குழுவினர் ஆகியோர் உருவாக்கிய முகம் அடையாளம் காணும் செல்லிடப் பேசி செயலியான  ஃபேஸ்டேகர் என்ற செயலியானது தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
    • தேசிய காவலர் பயிற்சி நிலையம் (National Police Academy) மற்றும் காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் (Bureau of Police Research and Development) ஆகியோருக்கு இந்தியக் காவல் பணி அதிகாரி ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், முழு அளவிலான 'தேசிய தானியங்கி முக அங்கீகாரம்' அமைப்பு விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைப் படுத்தப்  படும்.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான பங்கஜ் குமார், ஆதார் அட்டையை வழங்கும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட உள்ளார்.
  • முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அசாம் அமைச்சரவை, சிறிய குடும்ப விதிமுறைப்படி 2021 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு எந்த அரசாங்க வேலைகளும் வழங்கப் படாது என்று முடிவு செய்துள்ளது.
    • நிலமற்றப் பழங்குடியின மக்களுக்கு மூன்று பிகா அளவு விவசாய நிலத்தையும், வீடு ஒன்று கட்டுவதற்கு வேண்டி அவர்களுக்கு அரை பிகா அளவு நிலத்தையும் வழங்குவதாக அமைச்சரவை உறுதியளித்துள்ளது.
  • ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இரண்டாவது முறையாக வென்றுள்ளார். அவரது லிபரல்ஸ் கட்சி மொத்தம் 156 இடங்களை வென்றது. 338 இருக்கைகள் கொண்ட ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (கீழவை) என்ற அவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களில் 14 இடங்கள் குறைவாக அவரகள் பெற்றுள்ளனர். எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்றத்தில் 121 இடங்களை வென்றுள்ளது.
    • 24 இடங்களை வென்ற புதிய ஜனநாயகக் கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியத் தலைவர் ஜக்மீத் சிங் அடுத்த அரசாங்கத்தை உருவாக்க ஜஸ்டின் ட்ரூடோவை ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்