TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 29 , 2019 1728 days 598 0
  • குறிப்பிட்ட சமூகத் துறைகளில் இலக்கை நோக்கிய இடையீட்டிற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டப்லோ ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்துடன் (Abdul Latif Jameel Poverty Action Lab/J-PAL) இணைந்து செயல்பட  ஒடிசா மாநில அரசு தயாராகி வருகின்றது.
    • இது ஒடிசாவை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒடிசா அரசின் 5T என்ற  முன்முயற்சிகளின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றது.
  • சவூதி அரேபியாவின் மஸ்மாக் கோட்டையைப் பார்வையிட்ட முதலாவது மதச் சார்பற்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் போலந்து நாட்டைச் சேர்ந்த விடுமுறைக் குழுவினரும் ஒருவர் ஆவர்.
    • சுற்றுலாத் துறையை வளர்ப்பது என்பது சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மானின் 2030 ஆம் ஆண்டு தொலைநோக்கு சீர்திருத்தத் திட்டத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்றாகும்.
  • மறு காப்பீடு, முதலீடு, வெளிநாட்டு மறு காப்பீட்டுக் கிளைகள் (Foreign Re-insurance Branches - FRBs) மற்றும் லியோட்ஸ் இந்தியா ஆகியவற்றின் மீதான தற்போதுள்ள விதிமுறைகளின் தொகுப்பை மறுஆய்வு செய்ய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான  இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையானது  (Insurance Regulatory and Development Authority of India - IRDAI) ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
    • இதற்கு முன்பு வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 9 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவானது உறுப்பினர் திருமதி டி.ஆர்.அலமேலு தலைமையில் செயல்பட இருக்கின்றது.
  • ஜஸ்டிஷியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆல்பர்டோ பெர்னாண்டஸ் என்பவர் தற்போதைய அதிபரான PRO கட்சியின் வேட்பாளரான மொரிசியோ மேக்ரிக்கு எதிராக அர்ஜென்டினாவின் அதிபர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.
    • 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு பதவிக் காலங்களில் அர்ஜென்டினாவின் மிகவும் பிரபலமான அதிபர்களில்  ஒருவரான கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிரிச்னர் என்பவர் மீண்டும் அந்நாட்டின் துணை அதிபர் பதவிக்குத்  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • ஒரு கண்ணில் மட்டுமே பார்வையைக் கொண்டுள்ள பந்து வீச்சாளரும் டி.என்.பி.எல். போட்டியில் தனது செயல்பாட்டிற்காக சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்வு செய்யப் பட்டவருமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.பெரியசாமி என்பவர் திருவனந்தபுரத்தில் நடைபெறவிருக்கும் சையத் முஷ்தாக் அலி டி20 போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பாக விளையாடத்  தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்