TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 2 , 2019 1724 days 680 0
  • புது தில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச சூரியஒளிக் கூட்டமைப்பின் (International Solar Alliance - ISA) இரண்டாவது அமர்வில், எரித்திரியா மற்றும் செயிண்ட் கிட்டிஸ் & நெவிஸ் ஆகிய இரு நாடுகள் ISA கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
    • இது ISAவில் கையெழுத்திட்ட மொத்த நாடுகளின் எண்ணிக்கையை 83 ஆக உயர்த்துகின்றது.
  • தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI (இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் - Telecom Regulatory Authority of India) ஒரு அழைப்பானது சந்தாதாரரால் பதிலளிக்கப் படாமலோ அல்லது அந்த அழைப்பு நிராகரிக்கப் படாமலோ இருக்கும் சமயத்தில் அத்தொலைபேசி அழைப்பிற்கான நேரத்தை கைபேசிகளுக்கு 30 வினாடிகளாகவும்  தரைவழி  (லேண்ட்லைன்) தகவல்வட  தொலைபேசிகளுக்கு 60 வினாடிகளாகவும் நிர்ணயித்துள்ளது.
  • சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள CHACE-2 கருவியானது, சந்திரனின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் ஆர்கான் - 40 என்ற வாயுவினைக் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • இண்டிகோ நிறுவனமானது சர்வதேச விமானப் போக்குவரத்துச்  சங்கத்தில் (International Air Transport Association - IATA) உறுப்பினராக சேர்ந்துள்ளது. இது சர்வதேச சந்தைகளில் வலுவான கூட்டிணைவுகளை வளர்க்க அந்த விமான நிறுவனத்திற்கு உதவ இருக்கின்றது.
  • IATA என்பது 290க்கும் மேற்பட்ட விமானங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விமானத் தொழில் துறைக்கான ஒரு உலகளாவிய வர்த்தகச் சங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்