TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 3 , 2019 1723 days 685 0
  • தமிழ்நாடு நகராட்சி நிர்வாக அமைச்சகமானது “பந்திகூட்” என்ற சிலந்தி வகை ரோபோவை அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது துப்புரவுத் தொழிலாளர்களால்   சாக்கடை வாயிற் புழைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
    • இந்த ரோபோ ஆனது ஒரு சாக்கடை வாயிற் புழையின் வழியாக 30 அடி வரை சென்று, அங்கு திரட்டப்பட்டுள்ள கழிவுகளைச் சேகரிக்க இருக்கின்றது.
  • அமெரிக்காவின் ஓரிகானில் தயாரிக்கப்பட்ட “ரோக் ரிவர் ப்ளூ” என்று பெயரிடப்பட்ட கரிம நீல பாலாடைக் கட்டியானது வருடாந்திர உலக பாலாடைக் கட்டி விருதுகளில் உலகின் சிறந்த பாலாடைக் கட்டி என பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதலாவது நான்கு மேல்தாங்கு (மேலடுக்கு) போக்குவரத்துக் கட்டமைப்பை மகாராஷ்டிராவின் நாக்பூரில் கட்டமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India - NHAI) பரிந்துரைத்துள்ளது.
  • மகாராஷ்டிராவின் முன்னாள் காவல்துறை இயக்குநரான டி.டி. பட்சல்கிகர் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சர்வதேச புகழ்பெற்ற மணல் ஓவியக்  கலைஞரான ஒடிசாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சுதர்சன் பட்நாயக் என்பவர் மதிப்புமிக்க 2019 ஆம் ஆண்டின் இத்தாலிய கோல்டன் மணற் கலை விருதுக்குத்  தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
    • இத்தாலியில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஸ்கோரானா மணல் நேட்டிவிட்டி (பிறப்பிட) திருவிழாவின் போது இவர் கௌரவிக்கப்பட இருக்கின்றார்.
  • இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளால் இணைந்து உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் மீயொலி ஏவுகணையை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது.
    • இந்தியக் கடற்படை போர்க் கப்பலான ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி மணிலாவிற்கு பயணம் மேற்கொண்ட போது, பிரம்மோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு விற்பனை செய்வது குறித்து இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் விவாதித்தனர்.
  • நோவாக் ஜோகோவிச் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டித் தொடரின் ஐந்தாவது முதுநிலைப் பட்டத்தை வென்றுள்ளார். இவர் இறுதிப் போட்டியில் கனடா நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான டெனிஸ் ஷபோவலோவிற்கு எதிராக விளையாடினார்.
    • இந்த வெற்றி இந்தப் பருவத்தில் ஜோகோவிச்சின் ஐந்தாவது வெற்றியாகும். இதற்கு முன்பு இவர் இந்தப் பருவத்தில் விம்பிள்டன், அமெரிக்க ஓபன், மாட்ரிட் ஓபன் மற்றும் டோக்கியோ ஓபன் ஆகிய கோப்பைகளை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்