TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 8 , 2019 1718 days 705 0
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான எம்.வெங்கையா நாயுடு சென்னையில் ஒரு பழமையான தென்னிந்திய இசைக் கருவிகளின் கலை மற்றும் அறிவியலின் அரிய படைப்பான ‘மிருதங்கத்தின் சிறப்புமிகு இசை’ என்ற ஒரு தனிக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்.
    • இந்தத் தனிக் கட்டுரையானது புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞரான டாக்டர் உமையாள்புரம் சிவராமன், விஞ்ஞானி டாக்டர் டி.ராமசாமி மற்றும் டாக்டர் நரேஷ் ஆகியோரால் தயாரிக்கப் பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இந்தியாவின் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வுகளின் அதிகரிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இந்தியா அதன் மிகக் குறைந்த வருடாந்திர அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
    •   இது தற்பொழுது 2% ஆக இருக்கின்றது. இது கடந்த காலகட்டத்தில் ஒரு ஆண்டுக்குச் சராசரியாக 5% ஆக இருந்தது.
  • ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை (அக்டோபர் 15) உலக மாணவர்கள் தினமாக அனுசரிக்க ஐக்கிய நாடுகள் சபையால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று ஐ.நா தெளிவுபடுத்தியுள்ளது.
  • பூபென் ஹசாரிகாவின் எட்டாவது ஆண்டு நினைவு விழாவையொட்டி வங்க தேசத்தின் தேசிய கீதமானது சமஸ்கிருத மொழியில் தயாரித்து வெளியிடப் பட்டுள்ளது.
  • பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இளையோர் ட்ராப் கலப்புப் போட்டியில் விவான் கபூர் மற்றும் மனிஷா கீர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்