மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சரான சஞ்சய் தோத்ரே என்பவர் நவோதயா வித்யாலயா சமிதியின் “ஷாலா தர்பன்” என்ற ஒரு இணைய வாயிலைத் தொடங்கி வைத்தார்.
நவோதயா வித்யாலயாக்கள் என்பவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பான நவோதயா வித்யாலயா சமிதியால் நிறுவப்பட்ட ஒரு இருபாலின உண்டு உறைவிட வகைப் பள்ளிகளாகும்.