TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 12 , 2019 1714 days 799 0
  • உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை மலிவு விலையில் வழங்குவதற்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நான்கு மருத்துவ சாதனப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலகின் முதலாவது அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed natural gas - CNG) துறைமுக முனையத்தை பாவ்நகரில் கட்டமைக்க குஜராத் அரசு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • குஜராத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான துருவ் பிரஜாபதி என்பவர் 2 புதிய சிலந்திகளைக் கண்டுபிடித்துள்ளார். அவற்றில் ஒன்றிற்கு சச்சினின் நினைவாக மரேங்கோ சச்சின் டெண்டுல்கர் என்றும் மற்றொன்றிற்கு கேரளாவில் கல்வி குறித்த விழிப்புணர்வைப் பரப்பிய ஒரு அறப்போராளியான செயிண்ட் குரியகோஸ் எலியாஸ் சவரா என்பவரின் நினைவாக ‘இந்தோமரெங்கோ சவரபட்டர்’ என்றும் பெயரிட்டுள்ளார்.
  • ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சுருங்கி வருவதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் அரசானது இந்தப் பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக (ESZ - eco-sensitive zone) அறிவிப்பதற்காக பத்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வன விலங்குச் சரணாலயங்கள் ஆகியவற்றைச் சுற்றி 10 கி.மீ. தொலைவு வரை பரவியுள்ள பகுதிகளாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் இந்திய அரசின் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகத்தால் ESZகள் அறிவிக்கப் படுகின்றன.
  • இதே வகையில் முதலாவதான சமஸ்கிருத மொழி மீதான ஒரு உலகளாவிய மாநாடான “சமஸ்கிருத பாரதி விஸ்வ சம்மேளனம்” என்ற மாநாடானது புது தில்லியில் நடத்தப் பட்டது.
    • இந்நிகழ்ச்சியானது சமஸ்கிருத பாரதி என்ற ஒரு அரசு சாரா நிறுவனம் மற்றும்  இந்திய கலாச்சார உறவுகள் மன்றம் (Indian Council for Cultural Relations - ICCR) ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டது.
  • கூகுள் ஆனது ‘பெர்லின் சுவர்’ (நவம்பர் 9, 1989) இடிப்பின் 30வது நினைவு தின விழாவை டூடுலுடன் அனுசரித்து.
    • பெர்லின் சுவரானது ஒரு பாதுகாக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவராக இருந்தது. இது 1961 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பெர்லினை எல்லை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பிரித்து வைத்திருந்தது.
  • நியூசிலாந்து பாராளுமன்றமானது "சுழியக் கார்பன்" என்ற ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது 2050 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட அனைத்துப் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கும் “நிகர சுழிய இலக்கை” நிர்ணயிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அனைத்து வகுப்புகளிலும் பயிலும் பள்ளி மாணவர்கள், தங்களது பாடப் பகுதியில் “காலநிலை மாற்றம் மற்றும் நீடித்தத் தன்மையைப்” பற்றிப் படிப்பதை கட்டாயமாக்கிய உலகின் முதலாவது நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.
  • போலந்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் வல்லுனர்கள் அண்மையில் டைரனோசொரஸ் ரெக்ஸை விட சக்தி வாய்ந்த, கடிக்கும் தன்மை கொண்ட ஒரு பண்டைய கடல் ஊர்வன இனமான “ப்ளியோசர்” என்ற இனத்தின் தாடைகளையும் பற்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
    • இடையூழிக் காலத்தின் போது கடலில் வாழ்ந்த இரை பிடித்துண்ணிகளில் ஒரு மிகப் பெரிய இனமான ப்ளியோசார்கள் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியில் வாழ்ந்துள்ளன.
  • துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையமானது பொது போக்குவரத்துத் தின முன்னெடுப்பின் 10வது நினைவு தின விழாவை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று கொண்டாடியது.
    • இந்த ஆண்டின் கருப்பொருள், ‘சிறந்த வாழ்க்கைக்காக சிறந்தப் போக்குவரத்து’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்