TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 15 , 2019 1711 days 741 0
  • 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 - 79 வயதிற்குட்பட்ட பிரிவில் அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகளை (இரண்டாவது இடத்தில்) இந்தியா கொண்டுள்ளது.
    • முதல் 10 நாடுகளின் பட்டியலில் 116 மில்லியன் நீரிழிவு நோயாளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
  • பாலர் சங்க விழாவின் 11வது பதிப்பானது தேசிய நாடகப் பள்ளியினால் (National School of Drama - NSD) புது தில்லியில் உள்ள அதன் வளாகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டது. இது குழந்தைகளால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களின் சங்கமமாகும்.
  • 1889 ஆம் ஆண்டில் பிறந்த இந்தியாவின் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதியன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகின்றது.
    • கூகுள் ஆனது “நடமாடும் மரங்கள்" என்ற டூடுலுடன் இந்தத் தினத்தை அனுசரித்தது. இந்த டூடுல் ஆனது ஏழு வயது நிரம்பிய மாணவரான திவ்யாசன்ஹி சிங்கால் என்பவரின் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டது. இது காடுகள் அழிப்பிலிருந்து அடுத்த தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கான செய்தியைப் பரப்புகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்