TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 20 , 2019 1706 days 740 0
  • உலகளாவிய தாய்மார்களின் சர்வதேச மாநாட்டை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் புது தில்லியில் தொடங்கி வைத்தார். “வாசுதேவ குடும்பகம் - குடும்ப அமைப்பு மற்றும் தாயின் பங்கு” என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
  • மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் உலக மற்றும் ஆசிய குத்துச் சண்டை வீராங்கனையான எல் சரிதா தேவி புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச குத்துச் சண்டை சங்கத்தின் (International Boxing Association’s - AIBA) தடகள ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
    • ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரே பிரதிநிதி சரிதா தேவி ஆவார்.
  • கிம்பர்லி செயல்முறை அமைப்பின் தலைமை நாடாக உள்ள இந்தியா, கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் (Kimberley Process Certification Scheme - KPCS) ஒரு முழுமையான அமர்வை புது தில்லியில் நடத்தியது.
    • “பிளவர்” என்பவரது அறிக்கையின் அடிப்படையில், ஐ.நா பொதுச் சபையானது "பிரச்சினைக்குரிய வைரங்களை" பிரதான வைரச் சந்தையில் நுழைவதைத் தடுப்பதற்காக 2003 ஆம் ஆண்டில் KPCS செயல்முறையை நிறுவியது.
  • 650 கிலோமீட்டர் வரையுள்ள வரம்புள்ள, அணுசக்தி திறன் கொண்ட, நிலப் பரப்பிலிருந்து நிலப் பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஷஹீன் -1 என்ற ஏவுகணையைப் பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது பல இந்திய நகரங்களை தனது வரம்பிற்குள் கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்