TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 21 , 2019 1705 days 721 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் குறுகிய சேவை ஆணையத்தின் (Short Service Commission - SSC) கீழ் இணைந்தப் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்குவது குறித்து ஆயுதப் படைகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
    • தற்போது, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு SSCயின் கீழ் ஆயுதப் படைகளில் இணைந்தப் பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே நிரந்தர ஆணையத்தை அமைப்பதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
  • கரும்பு விவசாயிகளின் வசதிக்காக உத்தரப் பிரதேச அரசு “இ-கன்னா” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியானது இடைத்தரகர்களை ஒழிக்கின்றது மற்றும் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றது.
  • “அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இந்திரா காந்தி பரிசு- 2019” ஆனது புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும் ஒளிபரப்பாளருமான சர் டேவிட் அட்டன்பரோவுக்கு பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்காக அவர் மேற்கொண்ட அயராத உழைப்பிற்காக வழங்கப்பட உள்ளது.
    • முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் சர்வதேச நடுவர் மன்றத்தால் அட்டன்பரோவின் பெயர் இந்தப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • விலங்குகள் நலனின் மீது ஆர்வமாக இருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு “2019 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது” பீட்டா அமைப்பின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்