TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 22 , 2019 1704 days 758 0
  • சர்வதேச ஆற்றல் நிறுவனத்தினால் (International Energy Agency - IEA) வெளியிடப்பட்டுள்ள “2019  ஆம் ஆண்டின் உலக ஆற்றல் கண்ணோட்டம்” என்ற அறிக்கையானது 2018 மற்றும் 2040 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் நிகர எண்ணெய் இறக்குமதி தேவைகள் இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
    • இந்த அறிக்கையின் “நிலையான வளர்ச்சி நிலையானது” (Sustainable Development Scenario - SDS) புவி வெப்பமயமாதலை 1.65 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைப்  பட்டியலிடுகின்றது.
  • இலங்கையின் அதிபரான கோத்தபய ராஜபக்சே முன்னாள் அதிபரான மஹிந்தா ராஜபக்சேவை அந்நாட்டின் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்கள் வரை இலங்கையின் பிரதமராக அவர் பதவி வகிப்பார்.
    • பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்த போதிலும் தனது கட்சியின் அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாசாவின் தோல்வியைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியிலிருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவிற்குப் பதிலாக மஹிந்தா ராஜபக்சே பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கின்றார்.
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ஐந்து பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை விற்று, ரூ. 78,400 கோடி மதிப்பிலான நிதியைத் திரட்டுவதற்குத் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
    • இந்த நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம், இந்திய சரக்குக் கொள்கலன் கழகம், டிஎச்டிசி இந்திய நிறுவனம் மற்றும் வடகிழக்கு மின்சார எரிசக்திக் கழகம் ஆகியவை ஆகும்.
  • நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தில்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமையின் தலைமையகத்தில் "QUAD" நாடுகளுக்கான (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) முதலாவது தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியை தேசியப் புலனாய்வு அமைப்பு நடத்துகின்றது.
    • CT-TTX (தீவிரவாத எதிர்ப்பு முன்னிலைப் பயிற்சி) என்பது பொது நலன்கள் குறித்த பிராந்திய & உலகளாவியப் பிரச்சினைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு & ஒத்துழைப்பு ஆகியவை குறித்து QUAD நாடுகளிடையே நடத்தப்படும் ஒரு முதலாவது பயிற்சியாகும்.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய தீவிரவாதக் குறியீடானது 2018 ஆம் ஆண்டில் 163 நாடுகளுக்கான தீவிரவாதத்தின் தாக்கத்தை ஆய்வு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பாக தாலிபான்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
    • 7,000க்கும் அதிகமான இறப்புகளுடன்  அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளன.
  • 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது நவம்பர் 21 ஆம் தேதியை உலக தொலைக்காட்சித் தினமாக அறிவித்தது. 1996 ஆம் ஆண்டில் இத்தினத்தில் முதலாவது உலகத் தொலைக்காட்சி மன்றம் நடத்தப்பட்டதை இத்தினம் நினைவு கூறுகின்றது.
  • வளமான கடல்சார்ந்த சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்காகவும் உலகில் உள்ள மீன் வளத்தின் நிலையான பங்கினை உறுதி செய்வதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதியன்று உலக மீன்வள தினம் கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்