TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 26 , 2019 1700 days 765 0
  • கல்வி நிபுணர், ஆசிரியர் மற்றும் கேரளப் பல்கலைக் கழகத்தின் பதிப்பகத்  துறையின் தலைவரான எம்.எம். குழிவேலி என்பவரை கௌரவிப்பதற்காக அவரது உருவம் பொறித்த ஒரு அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
    • இவர் “விஜ்னனம்” என்ற முதலாவது கலைக் களஞ்சியத்தை மலையாளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் குழந்தைகளின் இலக்கியத்திற்காக சிறப்பாகப் பங்காற்றியுள்ளார்.
  • இந்தியக் கடற்படைக்கும் ஜப்பானியக் கடல்சார் தற்காப்புப் படைக்கும் இடையே வெடி பொருள்களை செயலிழக்கச் செய்தல் மற்றும் சுரங்க எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்த ஒரு முதலாவது இருதரப்புப் பயிற்சியானது கொச்சியில் நடத்தப் பட்டது.
  • வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறைக்கான மத்திய அமைச்சரான ஜிதேந்திர சிங் என்பவர் 4 நாட்கள் நடைபெறும் ‘வடகிழக்கு இலக்கு’ என்ற ஒரு நிகழ்ச்சியை உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் தொடங்கி வைத்தார்.
    • இந்தத் திருவிழாவானது  வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் கைவினைப் பொருள்களின் வேலைப்பாடு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றது.
  • ரூபாயின் சர்வதேச மயமாக்கலை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரு சிறப்பு வம்சாவளி ரூபாய் கணக்குகளைத்  (special non-resident rupee - SNRR) தொடங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. இந்த கணக்குகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக பணம் அனுப்ப இந்த வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்