TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 29 , 2019 1697 days 689 0
  • 28.11.2019 அன்று வேலூர் மாவட்டத்திலிருந்துப் பிரிக்கப் பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
    • இதனால் தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது.
  • யானைக்கால் நோயை (ஃபிலேரியாசிஸ்) ஒழிப்பதற்காக உத்தரப் பிரதேச அரசு 47 மாவட்டங்களில் ஒரு மூன்று வார தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்த பிரச்சாரம் ஆனது 2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான மத்திய அரசின் திட்டத்துடன் ஒத்திசைந்துள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் டேலி வேலி வனவிலங்கு சரணாலயத்தில் “டிராச்சிசியம் ஆப்டீய்” என்ற பெயர் கொண்ட விஷம் இல்லாத பாம்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
    • நன்கு அறியப்பட்ட ஒரு கடல் உயிரியலாளரும், மும்பை இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் இயக்குனருமான தீபக் ஆப்தேவின் பங்களிப்பைக்  கௌரவிக்கச் செய்வதற்காகவே அதற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
  • லித்தியம் அயனி கொண்ட மின்கல உற்பத்தி தொழில்நுட்பத்தை வாங்குவதற்காக பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனமானது இஸ்ரோவுடன் ஒரு தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • விண்வெளி-தர மின்கலமானது தேவைக்குத் தகுந்தவாறு மாற்றி அமைக்கப்படும். இவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு  பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
  • மத்திய அமைச்சரவையானது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் வரி மற்றும் பிற வளங்களைப் பிரிப்பது குறித்து முடிவு செய்ய இருக்கும் 15வது நிதி ஆணையத்தின் காலத்தை நீட்டித்துள்ளது.  இது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி வரை ஒரு வருடம் நீட்டித்துள்ளது.
    • இந்த ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர் என்.கே. சிங் ஆவார். அக்குழு 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதி ஆண்டுகளுக்குத்  தேவைப் படும் நிதியைப் பகிர்ந்து அளிக்கச் செய்திடும் ஒரு இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்