TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 3 , 2019 1693 days 723 0
  • நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் நீண்ட வரம்பு கொண்ட (தொலைவு) மற்றும் அணுசக்தி திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி - 3 என்ற ஏவுகணையின் முதலாவது இரவு நேரச் சோதனையானது ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் மேற்கொள்ளப் பட்டது.
    • இருப்பினும், அக்னி - 3 ஏவுகணையின் இந்த முதலாவது இரவு நேரச் சோதனை ‘தோல்வியில்’ முடிந்தது.
  • உறைந்த சேற்றில் பல நூற்றாண்டுகளாக புதையுண்டு இருந்த 18,000 ஆண்டுகள் பழமையான நாய்க் குட்டியானது சமீபத்தில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்திய இராணுவம் அதன் தாக்குதல் திறன்களை சோதிப்பதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாத காலப் பயிற்சி நடவடிக்கையான ‘ஹிம் விஜய்’ என்று அழைக்கப் படும் ஒரு  பயிற்சியினை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்