TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 4 , 2019 1692 days 715 0
  • மேகாலயாவில் இயங்கி வரும் ஒரு  கிளர்ச்சிக் குழுவான ‘ஹைனிவெட்ரெப் தேசிய விடுதலை மன்றம்’ (எச்.என்.எல்.சி) மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு தடையை  விதித்துள்ளது.
  • மத்திய பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சகமானது  ‘முறையாக இயங்கும் முக்கியமான நிதி சேவை வழங்குநர்களை’ நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டுக் கட்டமைப்பு (Insolvency and Bankruptcy Code) வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான கட்டமைப்பை வழங்கும் விதிகளை வெளியிட்டுள்ளது.
  • செபாஸ்டியன் பினேரா தலைமையிலான சிலி அரசாங்கமானது ஒரு  புதிய அரசியல் சாசன அமைப்பை உருவாக்குவதற்காக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாக்கெடுப்பு நடத்த உள்ளது. தற்போதைய அரசியலமைப்பு சாசனமானது 1980 ஆம் ஆண்டில் அகஸ்டோ பினோசே தலைமையிலான இராணுவ அரசாங்கத்தால் இயற்றப்பட்டது.
  • ஐரோப்பிய முதலீட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதித் துறை ஆகியவை 2021 ஆம் ஆண்டின் இறுதியில் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரித் திட்டங்களுக்கு நிதியளிப்பதை நிறுத்த உள்ளன.
  • இந்தியா-ஐரோப்பா 29 வர்த்தக மன்றத்தின் 5வது பதிப்பானது சமீபத்தில் புது தில்லியில் நடைபெற்றுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஐரோப்பிய வர்த்தகத் தளமாகும்.
    • இது தொழில்துறை அமைப்பான இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்