TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2019 1685 days 771 0
  • சிபிஎஸ்இ பள்ளிகளில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவானது (AI -  Artificial Intelligence)  VIII, IX மற்றும் X ஆகிய வகுப்புகளில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான டாக்டர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
    • கற்பித்தல் – கற்றல் ஆகியவற்றில் பன்முக அணுகுமுறையை மேம்படுத்துவதற்கும் புதிய எதிர்காலத் தலைமுறையினரிடையே AI குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கும் இந்த முயற்சியானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • கர்நாடகாவின் அரண்மனை நகரான மைசூரு நகரில் மனித நூலகம் என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது “புத்தகங்களுக்குப் பதிலாக மனிதர்கள்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • தேசிய பங்குச் சந்தையானது  (National Stock Exchange - NSE) பொது நலன் இயக்குநரான கிரிஷ் சந்திர சதுர்வேதியை அதன் தலைவராக நியமித்துள்ளது. இவர் அசோக் சாவ்லா என்பவருக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சந்தை ஒழுங்குமுறை ஆணையமான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (Securities and Exchange Board of India - SEBI) ஒப்புதலைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • படைத் தளபதியான பண்டலா நாகேஷ் ராவ் என்பவர் தக்சின் பாரத் (Dakshin Bharat - DB) பகுதியின் பொதுக் கட்டுப்பாட்டு அதிகாரி என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்திய இராணுவத்தின் தெற்குக் கட்டுப்பாட்டகத்தின் கீழ் உள்ள DB பகுதியின் தலைமையகமானது சென்னையில் உள்ளது.
  • அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அழகியான சோசிபினி துன்சி என்பவர் 2019 ஆம் ஆண்டின் மிஸ் பிரபஞ்சம் (Miss Universe 2019) என்று முடிசூட்டப்பட்டார்.
    • 2011 ஆம் ஆண்டில் லீலா லோபஸின் வெற்றிக்குப் பின்னர், மதிப்புமிகு நட்சத்திரங்கள் நிறைந்த இந்த கிரீடத்தை வென்ற மூன்றாவது ஆப்பிரிக்கப் பெண் மற்றும் இந்தப் பட்டத்தை வென்ற முதலாவது கருப்பினப் பெண் துன்சி ஆவார்.
  • புவியியல் ஆபத்துக் கண்காணிப்புக் குழுவான ஜியோநெட் என்ற அமைப்பானது வெள்ளைத் தீவில் (White island) எரிமலை வெடிப்பு "கணிசமாக அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளது.
    • நியூசிலாந்தில் உள்ள வெள்ளைத் தீவு / வகாரி என்ற இடத்தில் பயங்கர எரிமலை  வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்