TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 18 , 2019 1678 days 680 0
  • உலக வடிவமைப்பு அமைப்பானது (WDO - World Design Organization) தனது புதிய உலகளாவியத் திட்டமான ‘உலக வடிவமைப்பு முன்மாதிரி’ என்ற ஒரு திட்டத்தை கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் தொடங்க இருக்கின்றது.
    • இது உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய நகரங்களில் முழுமையான முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதையும் அவற்றை நிலையானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிய மேம்பாட்டு வங்கியானது (New Development Bank - NDB) இந்தியாவின் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதிக்கு (National Investment and Infrastructure Fund - NIIF) 100 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை வழங்கியுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது “ஸ்ட்ராண்ட்ஹூக்” எனப்படும் ஒரு மென்பொருள் வழுவிற்கு ஆண்ட்ராய்டு இயக்க முறைமையானது பாதிப்பிற்கு உள்ளாவது குறித்து மாநிலங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
    • நாட்டில் இணையவழிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக ‘இந்திய இணைய வழிக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre - I4C)’ என்ற ஒரு திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
  • பார்ச்சூன் 500 என்ற பட்டியலில் இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனமானது அரசிற்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கழகத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
    • பார்ச்சூன் 500 பட்டியல் என்பது உலகில் உள்ள செல்வம் மிக்க நிறுவனங்களின் ஒரு வருடாந்திரத் தரவரிசையாகும்.
  • இந்திய - திபெத்திய எல்லைக் காவல் படையானது (Indo-Tibetan Border Police - ITBP) தனது வீரர்களுக்காக ஒரு பிரத்தியேக திருமண இணைய தளத்தைத் தொடங்கியுள்ளது.
    • மத்திய ஆயுதக் காவல் படைகளிடையே (Central Armed Police Forces - CAPF) முதன் முதலில் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் நன்கு நிர்வகிக்கப்பட்ட ஒரு திருமண இணையதளம் இதுவேயாகும்.
  • புது தில்லியின் கன்னாட் என்ற இடத்தில் புகைக் கோபுரங்களை அமைக்கும் ஒரு சோதனைத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு மற்றும் தில்லி அரசிற்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • புகைக் கோபுரங்கள் என்பது காற்று சுத்திகரிப்பானாகச் செயல்படுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு காற்று சுத்திகரிப்புக் கட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்