TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 20 , 2019 1676 days 644 0
  • பூமியின் நிலப்பகுதியின் மீது அமைந்த ஆழமான பள்ளத்தாக்கானது கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள டென்மேன் பனிப் பாறையில் கண்டறியப் பட்டுள்ளது.
    • இந்தப் பள்ளத்தாக்கானது 100 கி.மீ நீளம் மற்றும் 20 கி.மீ அகலம் என்ற அளவில்  அமைந்துள்ளது.
  • இந்திய வர்த்தக தொழில்துறைக் கூட்டமைப்பானது உலகளாவிய விளையாட்டுகள் உச்சி மாநாட்டின் 9வது பதிப்பான “டர்ஃப் 2019 & இந்தியா விளையாட்டு விருதுகள் 2019” என்பதனை தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
  • கான்பூரில் பிரதமர் தலைமையிலான தேசிய கங்கை ஆணையமானது, கங்கை டால்பின் உயிரினங்களைக் காப்பாற்றுவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் வேண்டி முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் குறித்து விவாதித்தது.
  • 6வது இந்திய - இந்தோனேசியக் கூட்டு ஆணையக் கூட்டமானது புது தில்லியில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்