TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2019 1668 days 852 0
  • பாரத மிகுமின் நிறுவனமானது தமிழ்நாட்டின் நெய்வேலியில் உள்ள புதிய வெப்ப மின் திட்டத்தில் முதலாவது லிக்னைட் அடிப்படையிலான 500 மெகாவாட் வெப்ப அலகு ஒன்றை வெற்றிகரமாக அமைத்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான நீர்த் துப்புரவு மற்றும் சுகாதாரத் துறைகளில் தூய்மை இந்தியா திட்டத்தைத் திறம்பட செயல்படுத்தியதற்காக யுனிசெப் அமைப்பானது  தெலுங்கானாவில் உள்ள கம்மா ரெட்டி மாவட்டத்திற்கு விருது ஒன்றை வழங்கி உள்ளது.
  • நாடு முழுவதும் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலம் நாட்டைப் பாதுகாப்பதற்கு வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மற்றும் பங்களிப்பை நினைவு கூறுவதற்காக மத்திய நிதித் துறை அமைச்சர் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • முதல் முறையாக, இந்திய ரயில்வேவானது “ஹிம் தர்ஷன் விரைவு ரயில்” என்ற ஒரு புதிய ரயிலைத் தொடங்கியுள்ளது.
    • இது கல்கா (ஹரியானா) மற்றும் சிம்லா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவற்றிற்கு இடையே இயங்க இருக்கின்றது. இந்த ரயிலானது முழுவதும் புதிய ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான 66வது தேசிய திரைப்பட விருதுகளை 31 பிரிவுகளின் கீழ் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் புது தில்லியில் வழங்கியுள்ளார்.
  • போரியா மஜும்தார் என்பவர் நலின் மேத்தாவுடன் இணைந்துஒரு பில்லியனின் கனவுகள்: இந்தியா மற்றும் ஒலிம்பிக் போட்டிகள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
    • இந்தப் புத்தகமானது உலகளாவிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பயணத்தைப் பற்றி விவரிக்கின்றது.
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் 5வது சுற்று கடல்சார் விவகாரங்கள் தொடர்பான உரையாடலானது ஜப்பானின் டோக்கியோவில் நடத்தப் பட்டது.
    • டோக்கியோவில் நிகழ்ந்த இம்மாநாட்டில் இந்த உரையாடலைத் தவிர, ஆயுதக் குறைப்பு, ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடு ஆகியன குறித்த இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் 8வது சுற்று இருதரப்பு ஆலோசனைகளும் மேற்கொள்ளப் பட்டன.
  • பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்காக கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நிதிச் சேவை ஆணையத்துடன் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் செபி (இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) கையெழுத்து இட்டுள்ளது.
    • பங்கு ஒழுங்குமுறையின் வரம்பில் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • மத்திய பிலிப்பைன்ஸ் பிராந்தியமானது “ஃபான்ஃபோன் சூறாவளியால்” பாதிக்கப் பட்டுள்ளது. இந்த சூறாவளி பிலிப்பைன்ஸில் “உர்சுலா” என்றும் அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்