TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 8 , 2020 1657 days 862 0
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (மார்க்சிஸ்ட்) சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான சு. வெங்கடேசன் என்பவர் 2019 ஆம் ஆண்டின் இயல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • இந்த விருதானது கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டக் கழகத்தினால் வழங்கப்படுகின்றது. இது சர்வதேச அளவில் தமிழை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • கென்யாவின் கடற்கரையோர லமு என்னும் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் கென்யப் படைகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு இராணுவத் தளத்தை அல் - ஷபாப் தாக்கியுள்ளது.
    • லமு தீவானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகின்றது. இது கென்யாவின் கிழக்கில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது.
  • பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமையின் (Corporate Social Responsibility - CSR) வரிசையில், அறிவியல்சார் நிறுவனங்களில் அறிவியல் சமூகப் பொறுப்புடைமை (Scientific Social Responsibility - SSR) குறித்த அறிவிப்பை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.
    • இது செயல்படுத்தப்பட்டால், அறிவியல் சமூகப் பொறுப்புடைமை குறித்த தேசியக் கொள்கையை அமல்படுத்திய உலகின் முதலாவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்