TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 11 , 2020 1654 days 1262 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘மிலன்’ என்ற ஒரு சர்வதேசக் கடற்படைப் பயிற்சியை விசாகப்பட்டினம் நடத்த இருக்கின்றது.
    • இந்தப் பயிற்சியின் கருப்பொருள் “கடல் முழுவதும் கூட்டு விளைவு” (Synergy Across the Seas) என்பதாகும்.
  • 2021 - 22 ஆம் ஆண்டிற்குள் மண்டல ரயில்வேயிற்கு 1000 மெகாவாட் திறனுள்ள   சூரியஒளி மின்சக்தியையும் 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலை மின்சக்தியையும் வழங்க இருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
  • நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
    • இது குழந்தை இறப்பு, குழந்தையின் நோயுற்ற தன்மை, தாய்மார்களின் இறப்பு மற்றும் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு ஆகியவற்றைக் குறைப்பதில் கவனம் செலுத்துகின்றது.
  • இந்திய ரயில்வே நிறுவனத்தை எரிசக்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக மத்திய ரயில்வே அமைச்சகமும் இங்கிலாந்து அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
    • மேலும் மின்சார வாகன மின்னேற்று உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும் இங்கிலாந்து அரசு உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்