TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 12 , 2020 1653 days 608 0
  • நாடு முழுவதும் பதிவாகியுள்ள 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிப்பதற்காக மொத்தம் 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை (fast-track special courts - FTSCs) அமைப்பதற்கு 24 மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் ஒன்றிணைந்துள்ளன.
    • தேசியப் பெண்கள் பாதுகாப்புத் திட்டத்தின் (National Mission for Safety of Women - NMSW) ஒரு பகுதியாக இந்தச் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
  • பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எல்லைகளின் முக்கிய பகுதிகளில் வெட்ட முடியாத (தகர்க்க முடியாத) எஃகு வேலியை இந்தியா அமைக்க இருக்கின்றது.
    • முதலாவது எஃகு வேலியானது வங்கதேசத்தின் எல்லைப் பகுதியான அசாமின் சில்ச்சாரில் 7 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட இருக்கின்றது. இந்த வேலி அமைப்பிற்குப் பின்பு அந்த எல்லையானது எல்லைப் பாதுகாப்புப் படையால் ஆய்வு செய்யப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்