TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 15 , 2020 1650 days 664 0
  • பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘கர்மயுத்த கிரந்த்’ என்ற ஒரு புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
  • லடாக்கில் நடைபெற்ற ஏழாவது தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் பெண்கள் கோப்பையை லடாக் அணி வென்றது.
  • லோக்பால் உறுப்பினரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான நீதிபதி திலீப் பாபாசாகேப் போஷ்லே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • இந்தியப் போட்டி ஆணையமானது “இந்தியாவில் மின்னணு வணிகம் குறித்த சந்தை ஆய்வு: முக்கியக் கண்டுபிடிப்புகள் மற்றும் குறிப்புகள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மாநில வரி ஆணையர்கள் மற்றும் மத்தியத் தலைமை வரி ஆணையர்கள் ஆகியோர் பங்கேற்ற தேசிய ஜிஎஸ்டி மாநாட்டின் இரண்டாவது பதிப்பானது புது தில்லியில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்