TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 9 , 2020 1625 days 658 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் மேலும் 10 நாடுகளுக்கு  பாதுகாப்புத் துறை சார்ந்த 10 இணைப்புப் பதவிகள் (defence attaches - DA) உருவாக்கப் படும் என்று அறிவித்துள்ளார்.
    • இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் 39 மிகப்பெரிய உணவுப் பூங்காக்கள் மற்றும் 298 ஒருங்கிணைந்த குளிர் சங்கிலித் தொடர் திட்டங்கள் ஆகியவற்றிற்கு மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
    • பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா (Pradhan Mantri Kisan Sampada Yojana - PMKSY) என்ற திட்டத்தின் கீழ் உணவுப் பூங்காக்கள் மற்றும் குளிர் சங்கிலித் தொடர் திட்டங்களுக்கு  அனுமதி வழங்கப் பட்டுள்ளன.
  • அண்மையில் ஏற்பட்ட புதிய கொரோனா வைரஸ் (Novel Coronavirus - nCoV) பாதிப்பைச் சமாளிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO -  World Health Organisation), ஐரோப்பிய ஒன்றியம் (EU - European Union) மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன.
  • இந்தியாவின் எஃகு தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆனது இந்தியக் கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் ராஜேந்திர பந்த்தை அதன் விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.
  • அமெரிக்க - கிரேக்கப் பொருளாதார நிபுணரும் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுனருமான பினெலோபி கௌஜியானோ கோல்ட்பர்க் (57 வயது) என்பவர் தனது பதவி விலகலை (ராஜினாமா) அறிவித்துள்ளார்.
  • மகாராஷ்டிர மாநில முதல்வரான உத்தவ் பால் தாக்கரே, பத்திரிகைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக மூத்தப் பத்திரிகையாளரான தின்கர் கேசவ் ராய்கர் என்பவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.
  • ஜெஃப் வெய்னர் என்பவர் லிங்கிடின் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக  உருவெடுத்துள்ளார்.
    • லிங்கிடின் ஆனது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு தொழில்முறை வலையமைப்பு நிறுவனம் ஆகும்.
  • டஃப் & பெல்ப்ஸ் நிறுவனமானது 2019 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற விளம்பரத் தூதர் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இந்தக் குறியீட்டில் இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்