உலக உடல் வியாதி தினம் என்பது ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தின் விருந்து தினமாகும். இத்தினமானது பிப்ரவரி 11 அன்று கொண்டாடப்பட்டது.
இந்தத் தினமானது 1992 ஆம் ஆண்டில் இரண்டாம் போப் ஜான் பால் அவர்களால் நிறுவப் பட்டது.
உலக சுகாதார நிறுவனமானது (WHO - World Health Organisation) தற்பொழுது பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் நோய்க்கு ‘கோவிட் -19’ என்று பெயரிட்டுள்ளது.
இந்தப் புதிய பெயரானது "கொரோனா", "வைரஸ்" மற்றும் "நோய்" ஆகிய மூன்று சொற்களிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. இதில் 2019 ஆனது இந்த வைரஸ் தோன்றிய ஆண்டைக் குறிக்கின்றது.
கேரளாவைச் சேர்ந்த மூத்த இஸ்ரோ விஞ்ஞானியான ஜி. நாராயணன் என்பவர் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (NewSpace India Ltd - NSIL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
NSIL ஆனது இந்திய விண்வெளி நிறுவனத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வணிகப் பிரிவு ஆகும்.