TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 14 , 2020 1620 days 781 0
  • அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (United Nations High Commissioner for Refugees - UNHCR) ஒவ்வொரு ஆண்டும் அகதிகள் பயணிக்கும் தூரத்தை அறிந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு உலகளாவியப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
    • இந்தப் பிரச்சாரமானது 2 பில்லியன் கிலோமீட்டர் தொலைவு குறித்த ஒரு  பாதுகாப்புப் பிரச்சாரம் என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்திய ரிசர்வ் வங்கி, ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவன கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்கை ஒரு முறை மறுசீரமைப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு வருடம் அதாவது 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது.
    • ரிசர்வ் வங்கியின் முந்தைய வழிகாட்டுதல்களின்படி, மறுசீரமைப்பானது 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் செயல்படுத்தப்பட இருந்தது.
  • புதுச்சேரி சட்டமன்றமானது 2019 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தம் (Citizenship Amendment Act - CAA), தேசியக் குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens - NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (National Population Register - NPR) ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
  • இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 2020 ஆம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டெஸ்ட் தரவரிசையில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்