இந்தியப் பெண்ணியவாதி அறிஞரும் ஆர்வலருமான கீதா சென் என்பவர் 2020 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க டான் டேவிட் பரிசினை “நிகழ்காலம்” என்ற பிரிவின் கீழ் வென்றுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் 2020 ஆம் ஆண்டின் MILAN பயிற்சிக்கான வலைதளமானது (www.milan2020.org.in) தொடங்கப் பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியானது 1995 ஆம் ஆண்டு முதல் அந்தமான் நிக்கோபர் கட்டுப்பாட்டகத்தின் கீழ் உள்ள இந்தியக் கடற்படையினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகின்றது.
ராஜீவ் பன்சால் என்பவரை ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இந்திய அரசு நியமித்துள்ளது.
குத்துச் சண்டை வீரரான அமித் பங்கல் என்பவர் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (International Olympic Committee’s - IOC) தரவரிசையில் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பெண்கள் தரவரிசையில் இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் என்பவர் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
79 மில்லியன் ஆண்டுகள் பழமையான தனடோதெரிஸ்டுகளின் (தொட்டாற் சுணக்கம்) புதைபடிவங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
டைரனோசர்கள் என்பது இறைச்சியை உட்கொள்ளும் மிகப்பெரிய டைனோசர் இனங்களில் ஒன்றாகும்.
எரிசக்தி வள நிறுவனத்தின் (The Energy Resources Institute - TERI) முன்னாள் தலைவரும் இயக்குநருமான ராஜீந்திர குமார் பச்சௌரி புது தில்லியில் காலமானார்.
இவர் 2007 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change - IPCC) சார்பாக அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார்.