TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 28 , 2020 1606 days 593 0
  • சமீபத்திய ஓங்கில் கணக்கெடுப்பின் போது ஒடிசாவின் பிதர்கனிகா தேசியப் பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள கஹிர்மாதா கடற்கரைப் பகுதி ஆகியவற்றில் அருகிவிட்ட இனமான ஓங்கில்களின் (டால்பின்) எண்ணிக்கையானது 62 ஆகக் குறைந்துள்ளது.
    • கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 126 ஆக இருந்தது.
  • சர்வதேசக் துருவக் கரடி தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 27 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • இது புவி வெப்பமடைதல் காரணமாக துருவக் கரடிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கவனத்தை ஈர்க்கின்றது.
  • இந்தியாவின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடான “RAISE 2020: சமூக அதிகாரமளிதலுக்கான AIன் பொறுப்புஆனது ஏப்ரல் மாதம் புது தில்லியில் நடைபெற உள்ளது.
  • எகிப்தின் எதேச்சதிகார ஆட்சியாளரான (1981 முதல் 2011 வரை) ஹோஸ்னி முபாரக் என்பவர் சமீபத்தில் காலமானார்.
    • அந்த நாட்டுக் குடிமக்களின் எதிர்ப்பின் விளைவாக 2011 ஆம் ஆண்டில் இவர் எகிப்தின் ஆட்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
  • ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் மீன்களின் தசை செல்களில் வாழும் ஹென்னெகுயா சால்மினிகோலா என்ற ஒரு ஒட்டுண்ணியை இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்