TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 2 , 2020 1604 days 671 0
  • பிறரின் உதவியுடன் தற்கொலை செய்து கொள்வதற்கான தடையை ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிறரின் உதவியுடன் தற்கொலை செய்தலானது அந்நாட்டின் 2015 ஆம் ஆண்டுச் சட்டத்தால் தடை செய்யப் பட்டுள்ளது.
    • பிறரின் உதவியுடன் தற்கொலை செய்தல் என்பது பொதுவாக ஒரு மருத்துவர் அல்லது சுகாதாரச் சேவை வழங்குபவரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தற்கொலை ஆகும்.
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலுக்காக தமிழகத் தேர்தல் அதிகாரியாக கே. சீனிவாசன் என்பவரை நியமித்துள்ளது.
  • FICCI (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு - Federation of Indian Chambers of Commerce and Industry) அமைப்பானது ‘2020 ஆம் ஆண்டின் இந்தியா - நியூசிலாந்து வர்த்தக மன்றத்தின்’ சந்திப்பை புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் சித்ரக்கூட்டில் 296 கி.மீ தொலைவுள்ள ண்டேல்கண்ட்  அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்திய ரயில்வேயானது தனது முதலாவது ‘ரயில்களில் உணவு விடுதிகளை’ (Restaurant on Wheels) மேற்கு வங்கத்தின் அசன்சோல் ரயில் நிலையத்தில் தொடங்கியுள்ளது.
  • கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, நிக்கோசியாவில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில் இருந்து இந்தியத்  துப்பாக்கிச் சுடுதல் அணி விலகியுள்ளதாக இந்திய  தேசியத்  துப்பாக்கிச்  சுடுதல் சங்கம் (National Rifle Association of India - NRAI) அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்