2020 ஆம் ஆண்டு மார்ச் 5 -15 வரையிலான தேதிகளில் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்த ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சியானது (Geneva International Motor Show - Gims) இப்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.
முஹைதீன் யாசின் என்பவர் மலேசியாவின் புதிய பிரதமராக உருவெடுத்துள்ளார்.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் டூட்டி சந்த் (ஒடிசா) 2வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
வழக்கமான பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளைப் பாதிக்கும் வேலை நிறுத்தங்கள், பேரணிகள் மற்றும் முற்றுகைப் போராட்டங்கள் ஆகியவற்றைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வளாகங்களில் நடத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
OECD (பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு - Organisation for Economic Co-operation and Development) அமைப்பானது 2020 ஆம் ஆண்டிற்கான தனது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் கணிப்பை 6.2 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இது உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் கொடிய கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளது.
சில நாடுகள் கொரோனா நோய்க் கிருமியைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனமானது புதிய கொரோனா வைரஸிற்கான உலகளாவிய ஆபத்து மதிப்பீட்டை “கடுமையான” நிலையிலிருந்து “மிகக் கடுமையான” நிலைக்கு உயர்த்தியுள்ளது.