TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 7 , 2020 1599 days 588 0
  • மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (All India Institute of Medical Sciences - AIIMS) மருத்துவமனையானது 2022 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட இருக்கின்றது.
  • மக்களவையானது கனிம சட்டங்கள் (திருத்த) மசோதா, 2020ஐ நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவானது சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் சட்டம், 1957 மற்றும் நிலக்கரி சுரங்கச் சட்டம், 2015 ஆகியவற்றைத் திருத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பொலிவுறு நகரங்களுக்கான திறன்மிகு எரிசக்தி மற்றும் நீர் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியானது 2020 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை புது தில்லியில் நடத்தப்பட்டு வருகின்றது.
    • புது தில்லியில் உள்ள திறன்மிகு தொடர் மன்றமானது (Smart Grid Forum - ISGF) இந்தியத் திறன்மிகு பயன்பாட்டு வாரம் - 2020 (India Smart Utility Week 2020 - ISUW) என்பதனை ஏற்பாடு செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்