TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 6 , 2017 2606 days 860 0
  • ‘தாம்ரே’ என்று பெயரிடப்பட்ட வெப்ப மண்டல புயலால் தீவிரமடைந்து உருவான சூறாவளியானது தென் சீனக்கடல் பகுதியில் வியட்நாமின் கடலோரப் பகுதிகளை தாக்கியுள்ளது. இரண்டாம் வகை சூறாவளிக்கு இணையான வலுவுடைய இந்த சூறாவளிப் புயலானது இந்த வருடத்தின் 12-வது சூறாவளியாகும்.
  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் பிரபலமடைந்த “போலியான செய்தி” (Fake News)’ எனும் வார்த்தையானது , அதன் உலகளாவிய பயன்பாட்டின் காரணத்திற்காக கோலின்ஸ் (Collins) அகராதியால் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக  அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சார்ந்த அகராதித் தொகுப்பாசிரியர் ஒருவர் ‘போலியான செய்தி’ என்ற வார்த்தையின் பயன்பாடு கடந்த 12 மாதங்களில் 365 சதவீத உயர்வை கண்டுள்ளதாக கண்டறிந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்