“ரோல்ஸ் ராய்ஸ்” என்ற உலகளாவிய தொழில்துறைத் தொழில்நுட்ப நிறுவனமானது கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்காக மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Indian Institute of Technology Madras - IIT-M) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனமானது பிரிட்டனைச் சேர்ந்த சொகுசு ரக தானியங்கி மோட்டார் வாகனத் தயாரிப்பாளராகும்.
சமீபத்தில் தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகமானது FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் - Food Safety and Standards Authority of India) அமைப்பிடமிருந்து BHOG (கடவுளுக்குச் சுகாதாரமான உணவு வழங்குதல்) சான்றிதழைப் பெறுமாறு கோயில்களின் நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டது.
தற்பொழுது ஆப்கானிஸ்தானின் அதிபராகப் பணியாற்றி வரும் அஷ்ரப் கனி இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.