குடியுரிமைத் திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act - CAA), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register - NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens - NRC) ஆகியவற்றை எதிர்த்த ஏழாவது மாநிலச் சட்டமன்றம் தெலுங்கானா மாநிலச் சட்டமன்றமாகும்.
அமெரிக்க மத்திய வங்கியானது முக்கியமான வட்டி விகிதங்களை 0% முதல் 0.25% என்ற வரம்பு வரை குறைக்கப் படுவதாக அறிவித்துள்ளது.
இது அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மார்ச் 14 ஆம் தேதியன்று தமிழக முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவிருக்கும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.