தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway - SCR) மண்டலமானது தனது அதிகார பொறுப்பில் இருக்கும் அனைத்து இரயில் நிலையங்களிலும் 100 சதவீதம் எல்இடி (LED) விளக்குகளைப் பொருத்தியுள்ளது.
அனைத்து இரயில் நிலையங்களிலும் எல்இடி விளக்குகளைப் பொருத்திய நாட்டின் முதல் இரயில் மண்டலம் இதுவாகும்.
இந்த நடவடிக்கையின் விளைவாக நாட்டில் 32 இலட்சம் யூனிட்டுகள் வரை மின்சாரம் மிச்சப்படுத்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டிற்கு7 கோடி ரூபாய் அளவுக்கு செலவு குறையும்.
பீகார் மாநில அரசு சிகரெட் சில்லறை விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இதன் மூலம், உத்திரகண்ட், ஹிமாச்சலப்பிரதேசம், இராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி மற்றும் ஏனைய பிற மாநிலங்களைத் தொடர்ந்து பீகார் 12ஆவது இடத்தில் உள்ளது.