TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 6 , 2020 1569 days 567 0
  • நுபுர் குல்ஸ்ரேஸ்தா என்பவர் இந்தியக் கடலோரக் காவல் படையின் துணைப் பொது ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற முதலாவது பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.
  • மகராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் விமான நிலையமானது சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் விமான நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
    • சாம்பாஜி என்பவர் மராத்தியப் பேரரசின் இரண்டாவது ஆட்சியாளர் ஆவார்.
    • இவர் மராத்தியப் பேரரசைத் தோற்றுவித்தவரான சிவாஜி மற்றும் அவரது முதல் மனைவியான சாய்பாய் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். 
  • மார்ச் 23 ஆம் தேதியன்று, பஞ்சாப் மாநிலம் முழுவதும் எந்தவித விதிவிலக்கும் இல்லாமல் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்தது. கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கைப் பிறப்பித்த முதலாவது மாநிலமாக பஞ்சாப் மாநிலம் உருவெடுத்துள்ளது. 
  • பாரத ஸ்டேட் வங்கியானது தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக வேலூரில் நடமாடும் பணமெடுப்பு இயந்திரத்தை  (ATM) அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்