TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 7 , 2020 1568 days 568 0
  • சமீபத்தில் ஒடிசா மாநில அரசு யுனிசெப் அமைப்புடன் இணைந்து (ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் – UNICEF/ United Nations Children’s Funds) “மோ பிரதிவா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • ரூர்க்கியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது “பிராண வாயு” என்று அழைக்கப்படும் குறைந்த  செலவுடைய மற்றும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு செயற்கை சுவாசக் கருவியை மேம்படுத்தி உருவாக்கியுள்ளது.
  • இந்திய உணவுக் கழகமானது (FCI - Food Corporation of India) 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 அன்று ஒரே நாளில் 1.93 இலட்சம் டன்கள் உணவு தானியங்களை இடம் மாற்றச்  செய்து அதனை மாநிலங்களுக்கு வழங்கி சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. 
  • ஸ்பெயின் அரசானது கரோனா வைரசினால் ஏற்பட்ட பொருளாதார  நெருக்கடியைச் சமாளிப்பதற்காக நாடு தழுவிய அளவில் அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது. 
    • இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கும் முதலாவது ஐரோப்பிய நாடு இதுவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்