TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 26 , 2020 1519 days 575 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலகத் தேனீக்கள் தினத்திற்கான கருத்துரு, “தேனீக்கள் ஈடுபடுதல்” என்பதாகும்.
    • உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தரவுத் தளத்தின்படி, 2017-18 ஆம் ஆண்டிற்கான தேன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா (64.9 ஆயிரம் டன்கள்) எட்டாவது இடத்தில் உள்ளது. தேன் உற்பத்தியில் 551 ஆயிரம் டன்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
  • “கே.கே.ஆர்” என்ற நியூயார்க்கில் உள்ள ஒரு தனியார் பங்கு நிறுவனமானது ஜியோ தளத்தில் 2.32% பங்கிற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
    • முகநூல், சில்வர் லேக், விஸ்டா பங்குதாரர்கள் மற்றும் ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களுக்குப் பிறகு ரிலையன்ஸ் ஜியோவில்  மேற்கொள்ளப் பட்ட 5வது முதலீடு இதுவாகும்.
  • தெற்கு ஜெர்மனியில் உள்ள பிலிப்ஸ்பெர்க் அணு ஆற்றல் ஆலையை அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மூடத் தொடங்கியுள்ளனர்.
    • ஜெர்மனி ஆறிற்கும் மேற்பட்ட அணு ஆலைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இவை 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மூடப்பட இருக்கின்றன.
  • கொரானா வைரஸின் காரணமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப் பட்டுள்ள பொது முடக்கம் நீக்கப்பட்ட பின்பு படிப்படியாக விளையாட்டுப் பயிற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கு வேண்டி ஒரு தரநிலைச் செயல்பாட்டு நெறிமுறையை (SOP - Standard Operating Procedure) தயாரிப்பதற்காக 6 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை இந்திய விளையாட்டு ஆணையம் (SAI - Sports Authority of India) அமைத்து உள்ளது.
    • இது SAI-யின் செயலாளரான ரோகித் பரத்வாஜ் அவர்களால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.
  • மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் கடல்நீரைக் குடிநீராக்கும் ஒரு ஆலையை அமைப்பதற்கான ஒரு பரிந்துரைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
    • இந்தத் திட்டமானது ராமநாதபுரத்தின் கடலாடி தாலூகாவில் உள்ள குதிரைமொழி என்ற கிராமத்தில் அமைய இருக்கின்றது.
  • இந்தியப் பொருளாதார அறிஞரான அபாஸ் ஜா என்பவர் தெற்கு ஆசியப் பகுதியில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த ஒரு முக்கியமான பதவிக்கு உலக வங்கியால்  நியமிக்கப் பட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் இல்லமான “வேதா நிலையமானது” ஒரு நினைவு இல்லமாக மாற்றப்பட இருக்கின்றது.
  • இஸ்ரேல் நாடானது இந்தியக் கவிஞரான இரவீந்தரநாத் தாகூரின் பிறந்த தினத்தையடுத்து டெல் அவில் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்